2010-04-21 15:29:37

மறைபோதகர் Matteo Ricci பற்றிய கருத்தரங்கு ஒன்றில் சீனா உட்பட பலநாடுகளின் குறைந்தது 90 வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்


ஏப்ரல்21,2010 இத்தாலிய இயேசு சபை மறைபோதகர் Matteo Ricci சீனாவின் பெய்ஜிங்கில் 1610ம் ஆண்டு மே 11ம் தேதி இறந்ததன் 400 ம் ஆண்டை முன்னிட்டு இடம் பெறும் அவரைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் சீனா உட்பட பலநாடுகளின் குறைந்தது 90 வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்.

தாய்பேயிலுள்ள Fu Ren பல்கலைகழகத்தில் இடம் பெறும் 4 நாட்கள் கருத்தரங்கில், தாய்வானுக்கானத் திருப்பீட தூதுவர், மேலை நாட்டு வல்லுனர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

Fu Ren பல்கலைகழகத்தில் மத்தேயு ரிச்சி வெண்கலச் சிலை ஒன்றும் திறக்கப்பட்டது.

இக்கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய கர்தினால்கள் குழு தலைவராகிய கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, கிறிஸ்துவின் நற்செய்தியை சீனாவில் முதன் முதலில் அறிவித்தவர் மத்தேயு ரிச்சி என்று பாராட்டியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.