2010-04-21 15:51:23

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஏப்ரல்21,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடந்த ஞாயிறன்று மால்ட்டா நாட்டில் நிகழ்த்திய திருப்பயணம் குறித்து இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தில் எடுத்துரைத்தார்.

RealAudioMP3 கடந்த வார இறுதியில் நான் மால்ட்டா நாட்டிற்குச் சென்று, அந்நாட்டில் புனித பவுலின் கப்பல் விபத்துக்குள்ளானது மற்றும் 3 மாதங்கள் அவர் அங்கு தங்கியிருந்ததன் 1950ம் ஆண்டை சிறப்பிக்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டேன். என்னை அன்புடன் வரவேற்ற அரசு மற்றும் தலத்திருச்சபை அதிகாரிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் என் ஆழமான நன்றியையும் வெளியிடுகிறேன். மால்ட்டா தீவுகளுக்கு புனித பவுலின் போதனைகள் வழி கிட்டிய விசுவாசம், புனிதத்துவம் மற்றும் மறைப்பணி ஆர்வத்திற்காக புனித பவுலின் திருக்குகையில் அந்நாட்டில் நான் இறைவனுக்கு நன்றி கூறினேன். மால்ட்டாவின் வாழ்விலும் கலாச்சாரத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ள கிறிஸ்தவக் கண்ணோட்டமானது, இந்நவீன காலத்தின் சமூக மற்றும் ஒழுக்கரீதி சவால்களை எதிர்கொள்வதற்கான தூண்டுதலை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. புனித Publius ஆலயத்தில் இடம்பெற்ற மகிழ்ச்சி நிறை கொண்டாட்டத்தில் மால்ட்டா மக்களின் உயிர் துடிப்பான விசுவாசம் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டது. பல வழிச்சாலைகளின் இயற்கையான சந்திப்பாக இருக்கும் மால்ட்டா நாடு எப்போதுமே தன்னை மூடிக்கொண்டதில்லை மற்றும் தன்னை தனிமைப்படுத்தியதில்லை. அந்நாட்டில் எங்கும் தூக்கப்பட்டு அசைக்கப்பட்டுக் கொண்டிருந்த மால்ட்டா சிலுவையும் அன்பு மற்றும் ஒப்புரவின் அடையாளம் எனும் தன் உண்மையான அர்த்தத்தை என்றும் இழந்ததில்லை. நற்செய்தியின் உண்மை மற்றும் ஞானத்தை மற்றவர்களுக்கும் எடுத்துச்செல்லும் சவாலானது சிறப்பான விதத்தில் இளைய தலைமுறையைச் சார்ந்து உள்ளது. மால்ட்டாவின் வலெட்டா துறைமுகத்தில் அந்நாட்டு இளைஞர்களை சந்தித்த நான், புனித பவுலை ஒரு மாதிரிகையாக எடுத்துக்கொண்டு அவரின் ஆன்மீகப்பாதையில் நடை போடுமாறும், உயிர்த்த கிறிஸ்துவுடன் ஆன சந்திப்பில் அவர்களின் வாழ்வு மாற்றம் பெறும் படியாகவும், வழியில் வரும் எந்த புயல் மற்றும் கப்பல் விபத்தை விட இறைவனின் அன்பு நிறைத் திட்டம் வலிமை வாய்ந்தது என்பதில் நம்பிக்கை கொள்ளுமாறும் அவ்விளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

RealAudioMP3 இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, ரோம் நகரின் புனித ராயப்பர் பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.