2010-04-20 15:49:31

மரண தண்டனை மூலம் லஞ்ச உழலை ஒழிக்க முடியாது என்கிறது இந்தோனேசிய திருச்சபை.


ஏப்ரல் 20. உயர்மட்ட அளவில் லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க அரசு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதற்கு தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இந்தோனேசிய தலத்திருச்சபைத் தலைவர்கள்.

ஊழலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்பது, பிரச்னைக்கு ஒரு தீர்வாக முடியாது, மாறாக சிறு குற்றங்களைப் புரியும் சாதாரண மக்களை பலிகடா ஆக்கவேப் பயன்படும் என்றார் இந்தோனேசிய ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஐக்கிய மற்றும் மத விவகாரங்களுக்கான அவையின் செயலர் குரு. Antonius Benny Susetyo.

ஊழலில் ஈடுபட்டவர்களை பதவி நீக்கம் செய்து, தூய்மையான அதிகாரிகளை நியமிப்பதே இதற்கான தீர்வாகமுடியும் என்ற குரு, ஊழல் மயமாகிப்போன இந்த அரசியல் அமைப்புகள் தொடரும்வரை, பிரச்னைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றார்.

இந்தோனேசிய நாட்டிற்கு தேவைப்படுவது சீர்திருத்தங்களேயன்றி, மரண தண்டனைகள் அல்ல என்றார் தலத்திருச்சபையின் இளைஞர் அமைப்பின் தலைவர் Natalis Situmorang.








All the contents on this site are copyrighted ©.