2010-04-19 14:32:01

இலங்கையின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டிற்கு கத்தோலிக்க சமூகங்களின் பங்கு.


ஏப்ரல் 19. இலங்கையின் சிறு கத்தோலிக்க சமூகங்களின் திருவிழாவை இஞ்ஞாயிறன்று சிறப்பித்த தலத்திருச்சபை, நாட்டின் வடபகுதியில் போரால் அகதிகளானவர்கள் குறித்தும் ஏழைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

காலியான கல்லறையில் இயேசுவைத் தேடாமல் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு வாழும் மக்களில் அவரைக் கண்டு கொள்ளுமாறு அழைப்பு விடுத்த திருச்சபை அதிகாரிகள், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்கள் ஒவ்வொருவராலும் உணரப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

இறைவனில் அன்புகூர்ந்து சிறு கத்தோலிக்க சமூகங்களை இலங்கையில் கட்டியெழுப்ப நாம் நம்மை அற்ப்பணிப்போம் என்ற அழைப்புடன் இஞ்ஞாயிறு தினத்தை சிறப்பித்துள்ளது இலங்கை தலத்திருச்சபை.

சமூகத்தில் ஒவ்வொருவரையும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டு, உயிருள்ள இறைவனின் அரசைக் கட்டியெழுப்ப நாம் உழைப்போம் என தன் செய்தியில் கூறியுள்ளார் அடிப்படைக் கத்தோலிக்க சமூகங்களின் தேசிய அவையின் இயக்குனர் குரு. எரிக் ஃபெர்னான்டோ.








All the contents on this site are copyrighted ©.