2010-04-16 16:26:13

ஐரோப்பாவில் வறுமையை ஒழிப்பது குறித்து ஆயர்கள் ஆலோசனை


ஏப்ரல்16,2010 ஐரோப்பாவில் சுமார் 7 கோடியே 90 இலட்சம் பேர், அதாவது 16 விழுக்காட்டு ஐரோப்பியர்கள் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் வேளை, அக்கண்டத்தில் வறுமையை ஒழிப்பது குறித்து திட்டமிட்டு வருகின்றனர் ஐரோப்பிய ஆயர்கள்.

வறுமை மற்றும் சமூகத்தில் ஓரங்கட்டப்படுதலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் ஆண்டாக, 2010ம் ஆண்டு ஐரோப்பாவில் கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, ஐரோப்பிய சமுதாய அவை ஆயர்கள் இப்புதனன்று தொடங்கியுள்ள ஆண்டு கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து சிந்தித்து வருகின்றனர்.

ஐரோப்பிய கண்டத்தில் சுமார் 20 சதவிகித சிறார் வறுமையால் துன்பப்படுகின்றனர் என்றும், ஐரோப்பாவில் குடும்பத்தில் யாருமே வேலை செய்யாத நிலையில் பத்து பேருக்கு ஒருவர் வீதம் வாழ்கின்றனர் என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.