2010-04-15 15:24:02

பிரேசில் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை


ஏப்ரல்15,2010 கிறிஸ்தவ வாழ்வின் மையமாகவும் நற்செய்திப் பணியின் உச்சநிலையாகவும் இருக்கின்ற திருநற்கருணை திருவருட்சாதனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமாறு பிரேசில் ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை பாப்பிறையைச் சந்திக்கும் அட் லிமினாவை முன்னிட்டு இவ்வியாழனன்று சந்தித்த பிரேசில் நாட்டின் வடபகுதி ஆயர்களிடம் இவ்வாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
ஆசீர்வதிக்கப்பட்ட அப்ப இரசத்தில் இயேசு கிறிஸ்து உண்மையிலேயே பிரசன்னமாய் இருக்கின்றார் என்ற கத்தோலிக்க விசுவாசத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய திருத்தந்தை, திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் கிறிஸ்துவை வெளிப்படுத்தாவிட்டால் அவை கிறிஸ்துவ திருவழிபாடாக ஆகாது என்றும் கூறினார்.பண்பாட்டுமயமாக்குதல் என்ற பெயரில் பிற மதங்களின் வழிபாட்டுமுறைகளைத் திருப்பலியில் புகுத்துவது திருப்பலியின் உண்மையான பொருளை அனுபவிக்க முடியாமல் ஆக்கக்கூடும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.