2010-04-15 15:14:40

ஏப்ரல் 16 நாளும் ஒரு நல்லெண்ணம்


சுவாங் ட்சு என்ற ஞானியிடம் ஒருவர் வந்து, நகரில் புல்லாங்குழல் வாசிப்பவனைப் பற்றி, அவன் ஒரு திருடன், பாவி என்று சொன்னார். மேலும் அவனைப் பற்றி ஏகப்பட்ட குறைகளைச் சொன்னார். அதையெல்லாம் கேட்டுவிட்டு அந்த ஞானி சொன்னார்: “அவன் நன்றாகப் புல்லாங்குழல் வாசிக்கும் இசைக்கலைஞன் ஆயிற்றே” என்று. அதேசமயம் இன்னொருவர் அங்கே வந்தார். அவனா? அவன் அற்புதமான கலைஞன் என்றார் அவர். அதைக் கேட்ட ஞானி, “அவன் திருடனாயிற்றே” என்றார். இப்போது குற்றம் சாட்டியவரும் பாராட்டியவரும் குழம்பிப் போனார்கள். என்ன குருவே!, இப்படி முரண்பாடாகச் சொல்கிறீர்களே? என்று கேட்கவும் செய்தார்கள். அதற்கு ஞானி சுவாங் ட்சு, “நான் சரிக்கட்டுகிறேன். சமநிலைப்படுத்துகிறேன். அவனை எடைபோட நான் யார்? நீங்கள் யார்? அதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? நான் எதையும் ஏற்றுக் கொள்வதும் இல்லை. மறுப்பதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை அவன் நல்லவனும் இல்லை; கெட்டவனும் இல்லை; அவன் அவன்தான். அவன் வேலையைப் அவன் பார்க்கிறான். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். யாரையும் எடை போடாதீர்கள்” என்றார்.








All the contents on this site are copyrighted ©.