2010-04-14 15:06:13

பாலஸ்தீனியர்களுடன் இணக்கத்துடன் வாழ்வதற்கு பெருமளவான இஸ்ரேல் மக்கள் விரும்புகின்றனர் - புதிய ஆய்வு


ஏப்ரல்14,2010 பாலஸ்தீனியர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தி அவர்களுடன் இணக்கத்துடன் வாழ்வதற்கு பெருமளவான இஸ்ரேல் மக்கள் விரும்புகின்றனர் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மையத்தின் சார்பில் Dahaf நிறுவனம் நடத்திய ஆய்வில், மூன்று பேருக்கு இரண்டு இஸ்ரேலியர்கள் அதாவது ஏறத்தாழ 67 விழுக்காட்டினர் பாலஸ்தீனியருடன் இணக்கமாக வாழ விரும்புகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த 67 விழுக்காட்டு இஸ்ரேலியர்களில் 63 விழுக்காட்டினர் இஸ்ரேலில் வாழும் யூதர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.










All the contents on this site are copyrighted ©.