2010-04-14 15:00:22

திருத்தந்தையை மால்ட்டாவுக்கு வரவேற்பது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறு- பேராயர் கப்புத்தோ


ஏப்ரல்14,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்டை மால்ட்டாவுக்கு வரவேற்பது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறு என்று அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதுவர் பேராயர் Tommaso Caputo கூறினார்.

திருத்தந்தையின் மால்ட்டாவுக்கானத் திருப்பயணம், வருகிற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் இடம்பெறவுள்ளதை முன்னிட்டு ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த பேராயர் கப்புத்தோ இவ்வாறு கூறினார்.

“மால்ட்டா” என்ற நாடு திருத்தந்தையின் சொந்த வீடு போன்றது என்று குறிப்பிட்ட அவர், அந்நாட்டின் கதவுகள் அவருக்கெனக் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

திருத்தந்தையின் இத்திருப்பயணம், விசுவாசத்தின் தொடக்க காலங்களுக்கு மேற்கொள்ளும் ஒரு பயணமாக இருக்கும் என்றும் பேராயர் குறிப்பிட்டார்.

புனித பவுல் உரோமைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அவர் பயணம் செய்த கப்பல் மால்ட்டா கடல் பகுதியில் சேதமடைந்து அவர் மால்ட்டா தீவை அடைந்தார். அத்துடன் கிறிஸ்தவ விசுவாசமும் அங்கு பரவியது. இதன் 1950ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருத்தந்தையின் இத்திருப்பயணம் நடைபெறவிருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.