2010-04-14 15:47:44

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


RealAudioMP3 ஏப்ரல் 14. குருக்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஆண்டு தன் நிறைவை நெருங்கி வரும் இவ்வேளையில், இவ்வுயிர்ப்பு விழாக்காலத்தின் மறைபோதகங்களை குருத்துவம் குறித்த போதனைகளுக்கென அர்ப்பணிக்க விரும்புகிறேன் என இப்புதன் மறையுரையைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

போதித்தல், புனிதப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல் என்ற மூன்று செயற்பாடுகளின் வழி குருவானவர் திருச்சபையின் தலைவராம் கிறிஸ்துவைப்போல் உருமாற்றம் பெறுவது குறித்து பேச விழைகிறேன் என்ற பாப்பிறை, குருக்கள் தங்கள் மறைப்பணியில் கிறிஸ்துவாகவேச் செயல்படுகிறார்கள் என்றார். மேலே கூறிய மூன்று செயற்பாடுகளும் உயிர்த்த கிறிஸ்துவின் செயற்பாடுகளே. அவரே இன்றும் தன் குருக்களின் வழி தொடர்ந்து போதித்து, புனிதப்படுத்தி தன் திருச்சபையை நிர்வகித்து வருகிறார். இச்செயற்பாடுகளில் முதன்மையானதான கற்பித்தல் என்பது, நம் காலத்திற்கு முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகும். ஒரு குருவானாவர் தன்னைப்பற்றி கற்பிப்பதற்கோ, போதிப்பதற்கோ அழைக்கப்படவில்லை, மாறாக இயேசுவைக் குறித்தும் அவர் தந்தை குறித்து வெளிப்படுத்தியவைகள் பற்றியும் போதிக்க அழைப்புப் பெற்றுள்ளார். இப்போதனையானது புலனாகாத மறைக்கோட்பாடு அல்ல, மாறாக உண்மையாகவும், நம் மகிழ்வு, அமைதி மற்றும் ஆன்மீக மறுபிறப்பின் ஆதாரமாகவும் உள்ள யேசு கிறிஸ்துவைக் குறித்த உயிருள்ள அறிவிப்பாகும். ஒரு குருவானவர் என்பவர் பெரும்பாலான வேளைகளில் தன் காலத்தின் சக்தி நிறைக் கலாச்சாரத்தின் உணர்வுகளுக்கு எதிராகச்சென்று அப்போஸ்தலிக்கப் பாரம்பரியத்திற்கு இயைந்த வகையில், தான் அறிவிக்கும் நற்செய்தியின் உண்மைக்கு தன் முழு வாழ்வு மூலம் சான்று பகர அழைப்புப் பெறுகிறார்.RealAudioMP3 ஆர்ஸ் நகர புனித மரிய வியான்னியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி ஒவ்வொரு குருவும் அவரில் நல்லாயனாம் இயேசுவின் குரலை அனைவரும் செவிமடுக்கும் வண்ணம் கிறிஸ்துவை விசுவாசமுடன் அறிவிப்பார்களாக என உரை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.