2010-04-14 15:08:53

இந்தியாவில் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களால், நகர்ப்புற ஏழைகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்- நகர சுகாதார மையம்


ஏப்ரல்14,2010 இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களால், நகர்ப்புற ஏழைகள் அதிகளவு பாதிக்கப்படுவதாக, நகர சுகாதார மையத்தினர் தெரிவித்தனர்.

மக்களின் வாழ்க்கை முறைகளுடன் இணைந்து ஏற்படும் நோய்களை வாழ்க்கை முறை மாற்ற நோய்கள் என, மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதய நோய்கள், ஸ்ட்ரோக், அளவுக்கு அதிகமான உடல் எடை, நீரிழிவு நோய் வகை-2, புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அதிக கொழுப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், செல்லிட தொலைபேசி மற்றும் தொலைகாட்சி போன்றவற்றால் உடல் இயக்க செயல்பாடுகள் குறைவதே இதற்கு காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவில், நகர்ப்புறத்தை சேர்ந்த ஏழைகளும், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் இத்தகைய நோய்களால், அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்ற நோய்கள் ஆகியவற்றால், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவில் தொற்று நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், இந்தியா மலேரியா மற்றும் காசநோய் போன்றவற்றை ஒழிக்க இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.