2010-04-13 15:49:03

சைன மனித உரிமை நடவடிக்கையாளரின் விடுதலையை வேண்டியுள்ளது தலத்திருச்சபை


ஏப்ரல்13,2010 சைன அரசால் சிறைவைக்கப்பட்டு உடல் நலம் சீர்கேடடைந்திருக்கும் மனித உரிமை நடவடிக்கையாளர் ஹூ ஜியா உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு அரசை விண்ணப்பித்துள்ளது ஹாங்காங் தலத்திருச்சபை.
சுற்றுச்சூழல் சீர்கேடு, மனித உரிமை மீறல்கள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் சித்ரவதைப்படுத்தப்படல் போன்றவைகள் குறித்து எழுதியதற்காக சைன ஒலிம்பிக் விளையாட்டிற்கு முன் 2007 டிசம்பரில் கைது செய்யப்பட்ட மனித உரிமை நடவடிக்கையாளர் ஹூ ஜியா, மருத்துவ காரணங்களுக்காகவும் விடுதலை செய்யப்பட அரசால் மறுக்கப்பட்டு வருகிறார்.
அவரின் உடல் நலம் குறித்த தெளிவான அறிக்கை அவரின் குடுமபம் வசம் ஒப்படைக்கப்படவேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ள ஹாங்காங் மறைமாவட்டம், அவர் சிறை வைக்கப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் என குற்றம் சாட்டியுள்ளது. மூன்றரை ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஹூ ஜியா, தான் கைது செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சாக்கரோவ் சுதந்திர சிந்தனை விருது வழங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.