2010-04-10 12:48:14

புனித பவுல் போல் திருத்தந்தையும் மால்ட்டாவில் வரவேற்கப்படுவார்


ஏப்ரல்10,2010 1950 ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல் உடைந்து புனித பவுல் மால்ட்டா கரையில் ஒதுங்கியபோது எத்தகைய வரவேற்பை மக்களிடமிருந்து பெற்றாரோ அதே வரவேற்பு அடுத்தவாரம் அந்நாட்டிற்கு செல்லும் திருத்தந்தைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
95 விழுக்காட்டினரை கத்தோலிக்கர்களாகக் கொண்ட மால்ட்டாவில் வாழும் 4 இலட்சத்து 43,000 மக்களிடையே 26 மணி நேர திருப்பயணத்தை, வரும் சனி ஞாயிறு தினங்களில் (ஏப்ரல் 17,18) நிறைவேற்றவுள்ள திருத்தந்தை அந்நாட்டு இளைஞர்கள் அனைவரையும் ஒருசேர சந்தித்து உரை நிகழ்த்த உள்ளார்.கிறிஸ்தவத்தின் ஒழுக்க ரீதி மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளைக் கொண்டு எவ்வகையில் ஒரு அமைதியான, நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு மால்ட்டாவை ஓர் உதாரணமாக திருத்தந்தை முன்வைப்பார் என செய்தி நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.