2010-04-09 15:16:47

சிறுவர் சிறுமிகளைத் தவறான முறையில் பயன்படுத்தும் குருக்கள் குறித்த விதிமுறைகளை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் தீர்மானிக்க உள்ளனர்


ஏப்ரல்09,2010 ஏப்ரல் மாத இறுதியில் பெங்களூரில் நடைபெற உள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயற் குழு கூட்டத்தில் சிறுவர் சிறுமிகளைத் தவறான முறையில் பயன்படுத்தும் குருக்கள் குறித்த விதிமுறைகள் தீர்மானிக்கப் படும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணியாற்றிய ஓரிரு இந்திய குருக்களின் தகாத நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் அண்மையில் அதிகம் பேசி வருவது இந்திய திருச்சபைக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதென கூறிய கர்தினால் Gracias, இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியத் திருச்சபையில் அதிகம் இல்லை என்றாலும், இதைப் பற்றி ஆழமாக அலசி, இந்த முறைகேட்டிற்குத் தீர்வு காண்பதில் இந்திய ஆயர் பேரவை உறுதியாக இருக்கிறதென தெளிவு படுத்தினார்.அண்மைக் காலங்களில் திருச்சபைக்கும், திருத்தந்தைக்கும் எதிராக ஊடகங்கள் கூறி வரும் அவதூறுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்றும், இந்திய திருச்சபையும், உலகளாவியத் திருச்சபையும் ஊடகங்களால் சரிவர சித்தரிக்கப்படவில்லை என்றும் கர்தினால் Gracias தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.