2010-04-08 15:16:15

மத்திய அமைச்சர் Jairam Ramesh தன் உரையில் திருச்சபையை ஈடுபடுத்தியது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை - Bhopal பேராயர்


ஏப்ரல்08,2010 அண்மையில் Bhopalல் நடைபெற்ற ஒரு பட்டமளிப்பு விழாவில் சுற்றுச் சூழலுக்கான மத்திய அமைச்சர் Jairam Ramesh திருச்சபையைத் தேவையின்றி பலிகடா ஆகியுள்ளார் என்று Bhopal பேராயர் Leo Cornelio கூறினார்.
புனித வெள்ளியன்று Bhopalல் நிகழ்ந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் Ramesh, தன் உரையின் போது, தான் அணிந்திருந்த பட்டமளிப்பு உடையைக் கழற்றி, இந்த உடை மத்திய கால திருச்சபை அதிகாரிகள், பாப்பிறைகள் அணிந்த உடை அதனால் இந்தியாவுக்கு ஏற்றதல்ல என்று கூறியதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய பேராயர் Cornelio, அமைச்சரின் இந்தச் செயல் தேவையற்ற ஒன்று என்றும், அதிலும் சிறப்பாக தன் உரையில் திருச்சபையை ஈடுபடுத்தியது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை என்றும் கூறினார்.
அமைச்சர் இப்படிப்பட்ட கருத்துடையவர் எனில், அந்த விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருக்கலாம் அல்லது தன் கருத்தை இன்னும் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம். அதற்கு மாறாக, அவர் இப்படி நடந்து கொண்டது, அங்கு இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் இழிவுப் படுத்தும் ஒரு செயல் என்று பேராயர் கூறினார்.இந்தியாவில் தரமான கல்வியைக் கொண்டுவந்தது கிறிஸ்தவ பாரம்பரியமே என்பதை நினைவுபடுத்திய பேராயர், அமைச்சரின் இது போன்ற செயல் அடிப்படை வாதக் குழுக்கள் பிரச்சனைகளை உருவாக்க உதவும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.