2010-04-08 15:15:50

கர்தினால் Tarcisio Bertone சிலே நாட்டின் அரசுத் தலைவரைச் சந்தித்தார்


ஏப்ரல்08,2010 சிலே நாட்டின் அண்மைய நில அதிர்ச்சியின் விளைவுகளை மேற்கொண்டு அந்நாட்டை கட்டி எழுப்புவதில் அனைத்து குழுக்களின் ஒத்துழைப்பு குறித்து திருத்தந்தையின் மகிழ்ச்சியை அரசுத் தலைவர் செபாஸ்டின் பினேராவிடம் தான் தெரிவித்ததாகக் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone.
சிலே நாட்டின் பாதிப்புகளைத் திருத்தந்தையின் சார்பில் பார்வையிடச் சென்றுள்ள திருப்பீடச் செயலர் அந்நாட்டு கர்தினால் Francisco Javier Errazuriz, அந்நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Joseph Pinto, சிலே ஆயர் பேரவைத் தலைவர் Alejandro Goic ஆகியோருடன் இணைந்து சிலேயின் புதிய அரசுத் தலைவரைச் சந்தித்து உரையாடியபின் பத்திரிக்கையாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் உடனடியாகப் பதில் வழங்கிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, தலத் திருச்சபை அதிகாரிகள், திருத்தந்தை ஆகியோருக்கு அரசுத் தலைவரும் தன் நன்றியை வெளியிட்டதாகக் கூறினார் கர்தினால் Bertone.சிலே நாடு குடியரசானதன் 200ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் இடம் பெறும் இக்காலக் கட்டம் அம்மக்களின் உயரிய மதிப்பீடுகள் இடம் பெறும் காலமாக உள்ளதெனவும் கூறிய திருப்பீடச் செயலர், சிலே நாட்டில் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வதற்கு 2012 ம் ஆண்டிற்கு முன் வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.