2010-04-08 15:31:52

ஏப்ரல் 09 நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
உலகப் புகழ் பெற்ற மைக்கில் ஆஞ்சலோவை ஒருமுறை டார்ஜிலானோ என்ற மனிதர் கோபத்தில் அடித்து விட்டார். அதற்கு மைக்கில் ஆஞ்சலோ பதிலுக்குக் கோபப்படவில்லை. அதற்குப் பதிலாக அவரிடம், நீ என்னை அடித்து என் மூக்கை உடைத்த மனிதர் என்ற முறையில் மட்டுமே இந்த உலகத்தில் நினைவுகூரப்படுவாய் என்று சொல்லி அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாராம். உலகில் நல்லது செய்தவர்களும் தீமை செய்தவர்களும் நினைவுகூரப்படுகின்றார்கள். நல்லது செய்தவர்கள் என்றும் புகழப்படுகிறார்கள். ஆனால் கொடுமை செய்தவர்கள் திட்டி தீர்க்கப்படுகிறார்கள். ஆதலால் ஒருவர் எவ்வளவு சாதித்தார் என்பது முக்கியமல்ல, ஆனால் என்ன சாதித்தார் என்பதே முக்கியம்.







All the contents on this site are copyrighted ©.