2010-04-08 15:16:03

இலங்கையில் நேரிய ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் - கொழும்பு பேராயர் Malcolm Ranjith


ஏப்ரல்08,2010 இலங்கையில் இவ்வியாழனன்று நடைபெறும் தேர்தலில் கலவரங்கள், வன்முறைகள், சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள், அதிகாரக் குறிக்கீடு ஆகியவை இல்லாமல் நேரிய ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமென கொழும்பு பேராயர் Malcolm Ranjith கூறியுள்ளார்.
நாம் வாழும் பல தரப்பட்ட கலாச்சார, சமய, மொழிச் சூழலில் அனைவருக்கும் சமமான உரிமைகள் கிடைக்கவும், அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதிகளும் பாராளு மன்றத்தில் பங்கு பெறவும் இந்த தேர்தல் வழி வகுக்க வேண்டுமென பேராயர் Ranjith கேட்டுக் கொண்டார்.
225 அங்கித்தினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்திற்கு 7,620 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்றும், 14,000,000 குடிமக்கள் ஓட்டுரிமை பெற்றவர்கள் என்றும், 11,098 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.இவ்வியாழன் காலை ஆரம்பமான தேர்தலில் அதிகம் பேர் பங்கு பெறவில்லை என்றும், ஜனவரியில் அரசுத் தலைவருக்கான தேர்தலைச் சந்தித்ததால், மக்களிடம் ஒருவேளை ஆர்வம் குறைந்திருக்கலாம் என்றும் வேறொரு செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.