2010-04-07 15:42:29

குஜராத்தில் வாழும் பழங்குடியினருடன் உழைத்து வந்த இரு பணியாளர்களைக் கைது செய்தது கண்டிக்க தக்கது - இயேசு சபையினர்


ஏப்ரல்07,2010 இந்தியாவின் குஜராத் பகுதியில் வாழும் பழங்குடியினருடன் உழைத்து வந்த இரு பணியாளர்களைக் கைது செய்ததைக் கண்டித்து அங்குள்ள இயேசு சபையினர் குரல் எழுப்பியுள்ளனர்.
குஜராத்தின் பழங்குடியினரின் வாழ்வை முன்னேற்றும் நோக்கத்தோடு, கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் மத்தியில் உழைத்து வரும் Avinash Kulkarni, Bharat Powar என்ற இருவர் Maoistகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று இயேசு சபை குரு Xavier Manjooran தெரிவித்தார்.
இது போன்று பழங்குடியினரிடையே உழைப்பவர்களைக் கைது செய்யும் போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதெனவும், பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் ஒரு முயற்சி இதுவென்றும் அருட்தந்தை Manjooran மேலும் கூறினார்.
பெரும் தொழிலதிபர்களின் வற்புறுத்தல்களுக்கு அரசு பணிந்து, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பழங்குடியினரை அவர்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து விரட்டும் ஒரு முயற்சி இதுவென்று, அகமதாபாத்தில் மனித உரிமைகள் மையத்தை நடத்தி வரும் அருட்தந்தை Cedric Prakash கூறினார்.குஜராத்தின் 5 கோடியே 7 லட்சம் மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் பழங்குடியினர் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.