2010-04-07 16:06:41

ஏப்ரல் 08 - நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
உனக்குப் பிறன் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாயோ, அதையே நீ அவனுக்குச் செய்.
இது பதிலுக்குப் பதிலல்ல. மாறாக துவக்கம். வாழ்வையேப் புரிந்து கொள்ள வைக்கும் வார்த்தை.
செய்யாதே, செய்யாதே என தீமைகளை ஒதுக்கி வைக்கச் சொன்ன தடுப்புச் சட்டங்கள் முன், செய் என நன்மைகளைச் செயற்பட வைத்த வார்த்தை இது.
இது போதனை அல்ல. வாழ்வு நடைமுறை.
பிறர் தனக்குத் தீமை செய்ய வேண்டும் என எவரும் விரும்பிக் கேட்பதில்லை. ஆனால், பிறருக்குச் செய்யும் போது, தடுமாறுகிறோம். தடம் மாறுகிறோம்.
இன்றும், எந்த அரசிலும் நனமைகளைச் செய்யவைக்கச் சட்டங்கள் இல்லை. தீமைகளைச் செய்யாதிருக்கவே சட்டங்கள் தீட்டப்படுகின்றன.
நல்லவைகளை ஆற்றுவதை அவரவர் மனசாட்சியின் சட்டங்களுக்கே விட்டு விட்டார்கள்.ஆம். நீ உன்னை நேசிப்பது போல், பிறரையும் நேசி.







All the contents on this site are copyrighted ©.