2010-04-06 16:25:49

எக்காலத்தையும் விட தற்போது நம்பிக்கை தேவைப்படுகின்றது - எருசலேமின் லத்தீன் ரீதி பிதாப்பிதா Fouad Twal


ஏப்ரல்06,2010 இவ்வாண்டின் மேற்கத்திய மற்றும் கீழை ரீதி நாட்காட்டிகளில் கிறிஸ்துவின் உயிர்ப்பு ஒரே நாளில் வந்தது, விசுவாச ஐக்கியத்தின் வெளிப்பாடாக உள்ளது என்றார் எருசலேமின் லத்தீன் ரீதி பிதாப்பிதா Fouad Twal.
எக்காலத்தையும் விட தற்போது நமக்கு நம்பிக்கையும் சிறப்பு விதமான பலமும் தேவைப்படுகின்றது என்ற பேராயர், முதலில் நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் இருக்கும் தீமைகள் விசுவாசம் மூலம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.
தற்போது சிலி மற்றும் ஹெய்ட்டி நாடுகளின் நிலநடுக்கங்களின் போது அகில உலகத் திருச்சபை காட்டிய ஒருமைப்பாட்டுணர்வு, ஏற்கனவே பலமுறை மத்தியக் கிழக்குப் பகுதிகளின் துன்பங்களின் போது காட்டப்பட்டுள்ளது எனவும் கூறினார் அவர்.
இன, மத முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளும் இரத்தம் சிந்தும் மோதல்களும் நிறைந்துள்ள காலக் கட்டத்தில் நமக்கு உயிர்துடிப்புடைய நம்பிக்கையே அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்ற பேராயர் Twal, கிறிஸ்தவர்கள் தங்கள் வார்த்தைகளால் அல்ல மாறாக புனிதத்துவம், அன்பு மற்றும் சகிப்புத் தன்மையுடன் கூடிய வாழ்க்கையால் சான்று பகர வேண்டும் என மேலும் அழைப்பு விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.