2010-04-06 16:26:17

Bhopal தலத் திருச்சபை பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுடன் இயேசு உயிர்ப்பு விழா விருந்தைப் பகிர்ந்து கொண்டாடியது


ஏப்ரல்06,2010 மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்குடன் இந்தியாவின் மத்திய பிரதேசத் தலத் திருச்சபை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த 6000 பேருடன் இயேசு உயிர்ப்பு விழா விருந்தைப் பகிர்ந்து கொண்டாடியது.
ஏனைய கிறிஸ்தவ சபைகளையும், மதங்களையும் நெருங்கி வர வேண்டும் என்ற கத்தோலிக்கத் திர்ச்சபையின் முயற்சியின் ஒரு படியே இது என்றார் Bhopal பேராயர் Leo Cornelio.
தலத் திருச்சபைக்கு எந்தவிதமான இரகசியத் திட்டங்களும் இல்லை என்பதை இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் தலத் திருச்சபை எடுத்துக் காட்ட விரும்புவதாகவும் கூறினார் பேராயர்.Bhopal திருச்சபை ஏற்பாடு செய்திருந்த பாஸ்கா விருந்தில் கலந்து கொண்டருள் 2000க்கும் மேற்பட்டோர் புத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கியத்தைச் சேர்ந்தவர்கள் என்றார் தலத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் குரு: Anand Muttungal.







All the contents on this site are copyrighted ©.