2010-04-05 15:38:30

கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவின் போது பங்களாதேஷில் செல்வந்தர்கள் ஏழை கத்தோலிக்கருடன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர்


ஏப்ரல்05,2010 ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு, கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாக்களின் போது இப்பகுதியிலுள்ள ஏழை கத்தோலிக்கருடன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது இந்த விழாக்களை அர்த்தமுள்ளதாக்குகிறது என்று புனித வின்சென்ட் டி பால் சபையின் தலைவர் Paschal Pamer கூறினார்.
பங்களாதேஷின் டாக்கா மறைமாவட்டத்தின் டேஜ்கோன் (Tejgaon) பகுதியில் உள்ள செபமாலை அன்னை ஆலயத்தில் இஞ்ஞாயிறன்று புனித வின்சென்ட் டி பால் சபையினர் முயற்சியால் அங்குள்ள செல்வந்தர்களிடம் பெற்ற நிதி உதவியுடன் ஏறத்தாழ 1000 பேருக்கும் மேற்பட்ட ஏழை கத்தோலிக்கர்கள் உயிர்ப்பு விழாவை நல்ல முறையில் கொண்டாட வழி செய்யப்பட்டது.1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட புனித வின்சென்ட் டி பால் சபையின் சேவைகளால் அந்தப் பகுதியில் உள்ள ஏழை கத்தோலிக்கருக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல வழிகளிலும் உதவிகள் செய்யப்படுகின்றன என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.