2010-04-05 15:38:53

கல்விக்கான உரிமை குறித்த இந்திய அரசின் நடவடிக்கையை UNICEF, UNESCO ஆகிய நிறுவனங்கள் பெரிதும் பாராட்டியுள்ளன


ஏப்ரல்05,2010 நல்ல தரமான கல்வி அனைவருக்கும் சரிசமமாகக் கிடைக்க இந்திய அரசின் இந்த முயற்சி வழி வகுக்கும் என்று இந்தியாவில் செயல்படும் UNICEF நிறுவனத்தின் பிரதிநிதி Karin Husholf கூறினார்.
கல்விக்கான உரிமை என்பதை அடிப்படை உரிமையாக இந்திய அரசு அண்மையில் அமல்படுத்தியதை அடுத்து ஐ.நா. சபையின் UNICEF, UNESCO ஆகிய நிறுவனங்கள் இந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டியுள்ளன.
குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதில் உள்ள பல தடைகளை இந்த சட்டம் நீக்கியுள்ளதென்றும், அரசின் இந்த முக்கிய முடிவால் இந்தியாவின் வருங்காலம் இன்னும் சிறப்புறும் வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன என்றும் புது டெல்லியில் உள்ள UNESCO நிறுவனத்தின் இயக்குனர் Armoogum Parasuramen கூறினார்.
இந்த சட்டத்தால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் குறையும் என்று அகில உலகத் தொழில் நிறுவனத்தின் தென் ஆசிய அதிகாரி André Bogul கூறினார்.ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான ஒவ்வொரு குழந்தையும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை பெற்றுள்ளது என்றும், அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கும் என்றும், தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசுக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.