2010-04-03 14:22:01

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் கல்லறை, உரோமையில் மக்கள் அதிகமாகப் பார்வையிடும் இடங்களில் ஒன்று


ஏப்ரல்03,2010 உரோமையில் மக்கள் அதிகமாகப் பார்வையிடும் இடங்களில் ஒன்றாகத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் கல்லறை இருக்கின்றது.

2005ம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இறந்ததிலிருந்து வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவுக்கு கீழ்ப்பகுதியிலுள்ள அவரது கல்லறை மக்கள் அதிகமாகப் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக இருக்கின்றது.

காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை (கோடையில் மாலை 6 மணிவரை) ஒரு நாளைக்கு பன்னிரண்டாயிரம் பேர் வீதம் அதனைத் தரிசிக்கின்றனர் என்று அப்பசிலிக்கா அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதே பகுதியில் திருத்தந்தையர்கள் 3ம் கலிஸ்துஸ், 8ம் போனிபாஸ், 3ம் நிக்கோலாஸ், 7ம் இன்னோசென்ட், 8ம் நிக்கோலாஸ், முதலாம் ஜான் பவுல், ஆறாம் பவுல், 2ம் மார்செல்லுஸ், 9ம் இன்னோசென்ட் ஆகியோரின் கல்லறைகளும் இருக்கின்றன.

2005ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி இரவு 9.37 மணிக்கு வத்திக்கானில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.