2010-03-31 16:16:05

மதம் குறித்த மேற்கத்திய உலகினரின் பரவலானப் போக்குக்கு பேராயர் தொமாசி கண்டனம்


மார்ச் 31,2010 மதம் ஏதோ பழமையான ஒன்று போலவும் அது கேலிக்குரியது போலவும் நோக்கப்படும் போக்கை மேற்கத்திய உலகில் காணமுடிகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் குறை கூறினார்.

இத்தகைய போக்கு மேற்கத்திய உலகுக்கு ஆபத்தாக இருப்பதாகத் தான் கருதுவதாக, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி தெரிவித்தார்.

ஐரோப்பிய சமுதாய அவை உட்பட பல குழுக்களின் அதிகாரிகள், மதத்தைப், பழமையான ஒன்றாக நோக்கி அது வளர்ச்சிக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கின்றது என்று கருதுவதாக மேலும் தெரிவித்தார் பேராயர் தொமாசி.








All the contents on this site are copyrighted ©.