2010-03-31 16:21:00

சீனாவில் 2009ம் ஆண்டில் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது-ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்


மார்ச் 31,2010 உலகில் மரண தண்டனை நிறைவேற்றும் நாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து வருகின்ற போதிலும், சீனாவில் 2009ம் ஆண்டில் ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, இதன் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு மனித உரிமைகள் கழகம் அறிவித்தது.

சீனாவைத் தவிர 18 நாடுகளில் 714 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் இரான், ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையில் இது இடம் பெற்றுள்ளது என்றும் அக்கழகம் அறிவித்தது.

நைஜீரியாவில் தற்சமயம் 800க்கும் அதிகமான, மரண தண்டனைக் கைதிகள் இருக்கின்றனர் என்றும், கென்யாவில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட கைதிகளின் மரண தண்டனைகள் வேறு தண்டனையாக மாற்றப்பட்டுள்ளன என்றும் அம்மனித உரிமைகள் கழகம் கூறியது.

கடந்த ஆண்டில் ஐரோப்பாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறியுள்ளது அக்கழகம்.








All the contents on this site are copyrighted ©.