2010-03-30 15:14:31

நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்பு, சமயச்சார்பற்ற தன்மையைக் கொண்டிருக்கக் கிறிஸ்தவர்கள் செபம்


மார்ச்30,2010 நேபாளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்பு, சமயச்சார்பற்ற தன்மையைக் கொண்டிருக்கவும் அது முடிக்கப்பட வேண்டிய கெடு நாளான மே 28ம் தேதிக்கு முன்னரே முடிக்கப்பட வேண்டுமெனவும் செபித்து வருகின்றனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.

நேபாளம் இந்து நாடாக மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருவதை முன்னிட்டு கவலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள், நாட்டின் அமைதிக்கும் நிலையான தன்மைக்குமெனச் சிறப்பாகச் செபித்து வருகின்றனர்.

புனித எண்ணெய் மந்திரிக்கும் திருப்பலியைக் கடந்த வாரத்தில் நிகழ்த்திய நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் அந்தோணி ஷர்மா, நாட்டிற்காகச் சிறப்பாகச் செபித்தார்.

நேபாளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்பு குறித்து அந்நாட்டு கிறிஸ்தவப் பொதுமக்கள் அமைப்பு நடத்திய கலந்துரையாடலில், இந்துவாகிய அந்நாட்டின் உதவி அரசுத்தலைவர் Parmanada Jha, உலக இந்து கூட்டமைப்பின் நேபாள கிளைத் தலைவர் Damodar Gautam உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.