2010-03-30 15:12:00

ஜப்பான் மற்றும் கொரிய ஆயர்கள் சீனாவின் அமைதிக்காகச் செபித்தனர்


மார்ச்30,2010 சீனாவின் Liaoning மாநிலத்திலுள்ள Dalian கத்தோலிக்க ஆலயத்தில் சீனாவின் அமைதிக்காகச் செபித்தனர் ஜப்பான் மற்றும் கொரிய ஆயர்கள்.

ஜப்பானிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய Thomas An Jung-geun என்ற கொரிய மறைபோதகர், Dalian யிலுள்ள Lushun சிறையில் 1910ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ஜப்பானியர்களால் கொல்லப்பட்டார். இவர் கொரிய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்.

இவர் கொல்லப்பட்டதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு ஜப்பானிய ஆயர்களுடன் திருப்பலி நிறைவேற்றிய கொரிய ஆயர் Matthias Ri Iong-hoon, அப்பகுதியின் அமைதிக்காகச் செபித்தார்.

மேலும் இத்திருப்பலியில் உரையாற்றிய ஜப்பான் ஆயர் Marcellino Daiji Tani, ஜப்பானின் ஆக்ரமிப்பு மற்றும் காலனிக் கொள்கைகளால் துன்புற்ற அனைத்து ஆசிய நாடுகளிடம் மன்னிப்பையும் கோரினார்.

மனித வாழ்வையும் மனிதனின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆயர் டானி சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.