2010-03-29 14:12:22

மார்ச் 30 தவக்கால சிந்தனை


இயேசு தனது இவ்வுலக வாழ்வின் இறுதிக்கட்டம் நெருங்கி வரவர, உள்ளம் கலங்கியவராய்த் தம் சீடர்களிடம், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று திட்டவட்டமாகக் கூறினார். அவர் சீமோன் பேதுருவிடம், நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.

உண்மையில் வாழ்வதென்பது நமக்குப் பல்வேறு சூழலமைவுகளில் முடியாது போகின்றது. பேதுருவுக்கும் இந்நிலைதான் ஏற்பட்டது. இக்கட்டான சூழல் வந்த போது இயேசுவை மறுதலித்தார். யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்து வாழ்வை இழந்தான். ஆனால் பேதுரு தனது பாதகச் செயலுக்கு மனம் நொந்தழுதார். மறுவாழ்வு பெற்றார்.

நமது உள்மனது, இந்த உண்மையைச் சொல்லாது விடாதே,,,,என்று சொல்வதைக் கேட்ட பிறகும்கூட பொய்க்குத் துணையாக நாம் நிற்பதில்லையா? உண்மை கசக்கும். ஆனால் அதுதான் சரியான பாதையில் நெறிப்படுத்தும்.

“உண்மை மீது இடறி விழுந்தாலும் அவசரமாய் எழுந்து போய்விடுகிறார்கள்” என்றார் சர்ச்சில்.








All the contents on this site are copyrighted ©.