2010-03-29 16:25:44

திருமணம் புரியாமலேயே சேர்ந்து வாழலாம் என்ற அனுமதியை வழங்கும் இந்திய அரசின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தலத்திருச்சபை கவலை


மார்ச்29,2010 வயதுவந்தோர் இருவர் திருமணம் புரியாமலேயே சேர்ந்து வாழலாம் என்ற அனுமதியை வழங்கும் இந்திய அரசின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கவலையை வெளியிட்டுள்ளது தலத்திருச்சபை.
திருமணமின்றி இணைந்து வாழும் இருவருக்கும் பிறக்கும் குழந்தைகளின் வருங்காலம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ள இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினர்க்கான அவையின் செயலர் குரு வர்கீஸ் புலன் குடும்பத்தின் மூலம் மட்டுமே கிட்டக்கூடிய நிலையான மற்றும் பாதுகாப்பான ஒரு சூழலை இத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்வில் உணர முடியா நிலை இருக்கும் என்றார்.
அனைத்து மதங்களும் திருமணத்தின் புனிதத்தன்மையை உயர்த்திப்பிடிக்கும் நிலையில் நீதிமன்றத்தின் இத்தகைய அனுமதித் தீர்ப்புகள் திருமணத்தின் புனிதத்தன்மையையும் சமூகத்தின் ஒழுக்க மற்றும் கலாச்சார மதிப்பீடுகளை சீர்குலைக்கின்றன என்றார் குரு புல்லன்.திருமணமின்றி சேர்ந்து வாழும் நிலைகள் அனுமதிக்கப்படுவதால் குடும்ப முறிவுகள், பால்வினை நோய்கள், சிறுவயது கருத்தாங்கல்கள் போன்றவை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதையும் தலத்திருச்சபை சுட்டிக் காட்டியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.