2010-03-29 16:26:28

Zimbabwe நாடு ஒரு புது உயிர்ப்புக்காகக் காத்திருப்பதாக அறிவித்தார் அந்நாட்டு ஆயர் Dieter Scholz


மார்ச்29,2010 கல்வீடு என்ற பொருள் கொண்ட Zimbabwe நாடு, தகர்ந்து விழும் நிலையில் இருப்பதாகவும், அது ஒரு புது உயிர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் அறிவித்தார் அந்நாட்டு ஆயர் Dieter Scholz.
வேலை வாய்ப்பின்மை என்பது 80 விழுக்காடு அதிகரித்து, ஏழ்மை, பசி, துன்பம், நோய் போன்றவைகளால் மக்கள் தங்கள் நம்பிக்கைகளையும் இழந்து வருவதாகவும் கூறினார், அந்நாட்டின் Chinhoyi ஆயர்.
19ஆம் நூற்றாண்டில் இந்நாட்டை ஆக்ரமித்தவர்களின் வன்முறை, பேராசை, ஏமாற்றுத்தனம், அநீதி போன்றவைகளாலேயே இவ்வுள்நாட்டுப்போர் துவங்கியது என்ற ஆயர், இப்போரினால் ஆப்ரிக்க மக்களின் பொறுமை, சகிப்புத் தன்மை, மற்றும் மன்னிக்கும் மனப்பான்மை போன்ற கிறிஸ்தவ மதிப்பீடுகள் உலகுக்குத் தெரிய வந்துள்ளன எனவும் கூறினார்.Zimbabwe நாட்டில் நீதிக்காகக் குரல் எழுப்பும் திருச்சபைத் தலைவர்கள், பல்வேறு துன்பங்களை எதிர் நோக்க வேண்டியிருக்கிறது எனவும் கூறினார் ஆயர் Scholz.







All the contents on this site are copyrighted ©.