2010-03-27 15:19:04

மனித வியாபாரத்திற்கெதிரான உலக ஒப்பந்தத்தை 43 ஆப்ரிக்க நாடுகள் அமல்படுத்தி யிருக்கின்றன - ஐ.நா.பிரதிநிதி


மார்ச்27,2010 மனித வியாபாரத்திற்கெதிராகக் கொண்டுவரப்பட்ட உலக ஒப்பந்தத்தை இதுவரை 43 ஆப்ரிக்க நாடுகள் அமல்படுத்தி வருகின்றன என்று நைஜீரியாவின் அபுஜாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஐ.நா.பிரதிநிதி Joy Ezeilo அறிவித்தார்.

மேற்கு ஆப்ரிக்காவில் மனித வியாபாரத்தைத் தடை செய்வதற்கென நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு அவர் கூறினார்.

எனினும், வறுமை, வேலைவாய்ப்பின்மை, பாலியல் சமத்துவமின்மை போன்ற இவ்வியாபாரத்திற்குக் காரணமான விவகாரங்கள் இன்னும் ஒழிக்கப்படவில்லையெனவும் Ezeilo தெரிவித்தார்.

அடிமைத்தனமும் மனித வியாபாரமும் மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்கள் என்று இவ்வாரத்தில் செனகல் நாட்டில் சட்டமாகக் கொண்டுவரப்பட்டதையும் Joy Ezeilo குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.