2010-03-27 15:11:34

அன்னைமரியா கிறிஸ்துவுடன் உடன்மீட்பாளர் என்பது ஆசியாவின் நற்செய்திப் பணிக்கு உதவும்-இரண்டு ஆசியப் பேராயர்கள்


மார்ச்27,2010 அன்னைமரியை கிறிஸ்துவுடன் உடன்மீட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது ஆசியாவின் நற்செய்திப் பணிக்கும் பல்சமய உரையாடலுக்கும் உதவுவதாக இருக்கும் என்று இரண்டு ஆசியப் பேராயர்கள் கூறினர்.

மரியா, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் “உடன்மீட்பாளர், இடைநிலையாளர், ஆலோசகர்” என்று விசுவாச சத்தியமாக அறிவிக்கப்படுவதற்கு முயற்சி எடுக்கும் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசிய சென்னை-மயிலை பேராயர் மலையப்பன் சின்னப்பாவும் பிலிப்பைன்ஸ் பேராயர் Ramon Arguelles வும் இவ்வாறு கூறினர்.

"ஐந்தாவது மரியா விசுவாச சத்தியம் குறித்த ஒருநாள் உரையாடல்" என்ற தலைப்பில் உரோமையில் அவ்வியக்கம் நடத்திய கூட்டத்தில் பேசிய பேராயர் சின்னப்பா, கடவுளின் மீட்பளிக்கும் திட்டத்தில் அன்னைமரியின் பங்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது ஆசியாவின் பல்சமய உரையாடலுக்கும், நற்செய்திப் பணிக்கும் உதவுவதாக இருக்கும் என்று கூறினார்.

கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பணியில் மரியாவின் பங்கைத் தெளிவுபடுத்துவதன் மூலம் இது கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளுக்கும் உதவும் என்றும் பேராயர் சின்னப்பா கூறினார்.

ஆசியாவில் பிற சமயத்தவர் மத்தியில் செய்யப்படும் நற்செய்திப் பணியில் மரியா தனிப்பட்ட விதத்தில் பங்கு வகிக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்







All the contents on this site are copyrighted ©.