2010-03-26 14:42:58

மார்ச், 27. தவக்காலச் சிந்தனை.


RealAudioMP3 வழங்குபவர் இயேசு சபை அருட்தந்தை பவுல் ராஜ்.

தலைமைக் குருவாய் இருந்த கயபா தலைமைச் சங்கத்திடம், "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்றார். இது ஓர் இறைவாக்காக அமைவதாக இன்றைய யோவான் நற்செய்தி கூறுகிறது.

ஆம்! அன்பானவர்களே! இயேசுவின் சிலுவைச் சாவு யூத இனத்திற்கு மட்டுமன்றி மனித குலம் முழுமைக்கும் மீட்பளிக்கும் அடையாளச் சின்னமாக அமைய இருக்கிறது என்பதே கபாவின் இறைவாக்கில் அடங்கியிருக்கிறது.

நானும் தந்தையும் ஒன்றாயிருப்பது போல நீங்களும் ஒன்றாயிருப்பீர்களாக. எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதுவே இறைவனின் திருவுளம் என்னும் இயேசுவின் இறைவாக்கு அவரது சிலுவைச் சாவில் தான் நிறைவு பெறும் என்பதே கயபாவின் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது.

ஒன்றாயிருப்பது என்பது மிகக் கடினமானது. இனம், மொழி, நாடு, சாதி, சமயம் எனப் பல நிலைகளில் வேறுபட்டு பிரிந்து நிற்கும் மனித குலம் ஒன்றாகி வாழ்வது என்பது மிகக் கடினமானது. இக்கடினமான வாழ்வு நிலை சாத்தியமாவதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒரு சில காரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது.

விதை சாகும்போது மரமாகிறது- கெடு

வினை சாகும்போது உயிராகிறது, உறவாகிறது, ஒன்றாகிறது.








All the contents on this site are copyrighted ©.