2010-03-26 16:41:00

குவாத்தமாலா குடியரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


மார்ச்26,2010 குவாத்தமாலா குடியரசுத் தலைவர் Álvaro Colom Caballeros ஐ இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Dominique Mamberti ஆகியோரையும் சந்தித்தார் Caballeros.

குவாத்தமாலா அரசுக்கும் தலத்திருச்சபைக்கும் இடையேயான உறவுகள், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தலத்திருச்சபை ஆற்றும் பணிகள், வறுமை, திட்டமிட்ட குற்றக்கும்பல்கள் குடியேற்றதாரர் ஆகிய விவகாரங்கள் சர்வதேச சமுதாயத்திற்கு முன்வைக்கும் உலகிற்கு சவால்கள், மனிதனின் வாழ்வு தாயின் கருவறை முதல் இயல்பான மரணம் அடையும்வரை காக்கப்படுதல் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்து.








All the contents on this site are copyrighted ©.