2010-03-25 15:18:19

அரபு நாடுகளின் ஐக்கிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் விவாதங்களில் தான் கலந்து கொள்ள இருப்பதாக ஐ.நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon கூறினார்


மார்ச்25,2010 கிழக்கு எருசலேமில் புதிய குடியிருப்புகளைக் கட்டும் இஸ்ராயேலின் தீர்மானம் குறித்து அரபு நாடுகளின் ஐக்கிய கூட்டமைப்பு இந்த வார இறுதியில் மேற்கொள்ளும் விவாதங்களில் தான் கலந்து கொள்ள இருப்பதாக ஐ.நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon இப்புதனன்று செய்தியாளர்களிடம் .
சென்ற வாரம் இஸ்ராயேல் அரசு அறிவித்த 1600 புதிய குடியிருப்புகளும், இப்புதனன்று அறிவித்த மேலும் 20 குடியிருப்புகளும் சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானவை என்று கூறிய தலைமைச் செயலர், இந்த முயற்சிகள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலகின் இந்தப் பகுதியில் நிலவக்கூடிய அமைதிக்கு இஸ்ராயேல், பாலஸ்தீன் ஆகிய இரு நாடுகளும் முக்கிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்பது உண்மை என்றாலும், உலக நாடுகளும் இந்த அமைதி முயற்சிக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டுமென Ban கூறினார்.இந்த வார இறுதியில் நடைபெறும் பேச்சுக்களில் இஸ்ராயேல் பாலஸ்தீன் நாடுகளுக்கிடையேயான அமைதிக்கு அரபு நாடுகளின் முழு ஆதரவையும் தான் வேண்ட இருப்பதாக ஐ.நா.வின் தலைமைச் செயலர் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.