2010-03-24 15:05:02

சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரோமேரோ இறந்த 30ஆம் ஆண்டு நினைவு அந்த நாட்டில் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது


மார்ச்24,2010 தன் மறையுரையை முடித்து விட்டு, திருப்பலியைத் தொடர பீடத்திற்கு சென்ற போது பேராயர் ஆஸ்கர் ரோமேரோ சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அருட்சகோதரி Luz Isabel Cueva கூறினார்.
1980ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று காலைத் திருப்பலியை நிகழ்த்திக் கொண்டிருந்த சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரோமேரோ பீடத்திலேயே கொலையுண்டதன் 30ஆம் ஆண்டு நினைவு அந்த நாட்டில் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. பேராயர் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த திருப்பலி பீடம் இன்னும் மாற்றங்கள் எதுவும் இன்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இத்தாலியில் பாப்பிறை மறைபோதகக் கழகங்களின் இளையோருக்கான அமைப்பு இந்த நாளை மறைபோதகப் பணியில் உயிரிழந்தோர் நாளாகக் கடந்த 18 ஆண்டுகள் கொண்டாடிவருகிறதென்றும், இந்த 30ஆம் ஆண்டு நினைவாக அனுசரிக்கப்படும் இப்புதனை "என் வாழ்வு உங்களுக்கு உரியது" (My life belongs to you) என்ற மையக் கருத்துடன் செபம், உபவாசம் போன்ற வழிகளில் செலவிட அழைப்பு விடுத்துள்ளதென்றும் வேறொரு செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.