2010-03-24 15:04:39

கோவா அரசு, சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறு கோவில்கள் குறித்து மீண்டும் ஒரு முறை கணக்கெடுப்பது கத்தோலிக்கரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது


மார்ச்24,2010 கோவா அரசு, சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறு கோவில்கள், சிலுவைகள் குறித்து மீண்டும் ஒரு முறை கணக்கெடுப்பது கோவாவில் வாழும் கத்தோலிக்கரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மார்ச் மாதம் 14 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பு சரிவர அமையவில்லை என்றும், மீண்டும் ஒரு முறை இது நடத்தப்பட வேண்டுமென்றும் அரசு தீர்மானித்திருப்பதில் உள்நோக்கங்கள் இருக்கலாம் என்று அங்குள்ள கத்தோலிக்கப் பொது நிலையினரின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் பல நூறு ஆண்டுகளாய் நிறுவப்பட்டுள்ள இந்த சாலையோரக் கோவில்கள், சிலுவைகள் அந்த நகரில் சாலைகள் அமைப்பதற்கு முன்னமேயே நிறுவப்பட்டவை என்றும், போர்த்துக்கீசிய அதிகாரத்திற்கு உட்பட்ட அந்தப் பகுதியில் இதுபோன்ற அமைப்புகளை உருவாக்கிட எந்த வித பத்திரங்களும் இல்லை என்றும் கோவா உயர் மறைமாவட்டத்தின் சார்பாக பேசிய அருட்தந்தை Francis Caldeira கூறினார்.
கோவா மாநிலம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் கிலோமீட்டர்கள் நீளமான சாலைகளின் ஓரத்தில் ஏறக்குறைய 4000க்கும் மேற்பட்ட சாலையோரக் கோவில்கள், சிலுவைகள், இந்துக்களின் சிறு கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.