2010-03-23 15:02:32

மார்ச், 24 தவக்காலச் சிந்தனை


இதனை எழுதி வழங்குபவர் அருட்பணி பவுல்ராஜ், சே.ச.
RealAudioMP3
தான் வழிபடும் பொற்கடவுளை நீங்களும் வழிபடாவிட்டால் உங்களைத் தீச்சூளைக்கு இறையாக்குவேன் என்னும் நெபுகத்நேசருடைய கட்டளைக்கு மூன்று இளைஞர்களும் அடிபணிய மறுக்கிறார்கள். எனவே, அவர்கள் தீச்சூளையில் தூக்கி எறியப்படுகின்றனர். ஆனால், ஆண்டவரின் தூதர் அவர்களோடு பயணிக்க அம்மூவரும் தீயின் தீண்டுதலுக்கு இறையாகவில்லை.
தங்களது உயிரே போனாலும் தாங்கள் விசுவாசிக்கும் யாவே கடவுளை விடுத்து வேறொரு பொய்யுருவத்தை வழிபடப் போவதில்லை என்னும் அந்த மூன்று இளைஞர்கள் நமக்குச் சொல்ல விரும்பும் பாடம் என்ன? உயிருள்ள கடவுளை, அவரது மகன் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கும் நாம் எவ்வளவிற்கு கடவுளைச் சார்ந்தவர்களாக வாழ்கிறோம்? துன்பம் வருகிறபோது நாம் எவ்வளவிற்கு கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக அத்துன்பத்தை எதிர்த்து வாழ்கிறோம்?
இறைமகன் இயேசுவிற்காக அவரைப் போல நமது சிலுவைகளை நாளும் சுமந்து பயணிக்கும் சீடத்துவம் நம்மில் மிளிர்கிறதா? அன்றாடச் சிலுவைகளை நாம் விரும்புகிறோமா?
 







All the contents on this site are copyrighted ©.