2010-03-23 14:58:33

பத்திரிகைத்துறை மாணவர்களுக்கான கருத்தரங்கை நடத்தியது இந்தியத்திருச்சபை.


மார்ச் 23. பத்திரிகைத்துறை மாணவர்கள் நாட்டின் சமூக அரசியல் விவகாரங்களில் மேம்படட்ட முறையில் விமர்சனங்களை வழங்க உதவும் வகையில் சிறப்புக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது இந்திய ஆயர் பேரவை.

சமூகத்தொடர்பு ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த அதன் இயக்குனர் குரு. Jude Botelho உரைக்கையில், சமூகத்தொடர்புக் கல்வி என்பது வெறும் எழுத்துப் படிப்பல்ல, மாறாக இன்றைய சூழல்களை உள்ளடக்கிய நடைமுறைக் கல்வி என்றார்.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய Jamia Millia பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Zabiah Zaidi, இன்றைய சமூகத்தொடர்பு சாதனங்கள் பெண்கள், ஏழைகள், குறிப்பாக தலித் மற்றும் பழங்குடி மக்களின் பிரச்னைகளை எடுத்துரைப்பதில்லை என்றார்.

இதே கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர் Kayio Dilhrii உரைக்கையில், இன்றைய சமூகத்தொடர்பு சாதனங்கள், பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தங்களின் கடமைகளை மறந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.








All the contents on this site are copyrighted ©.