2010-03-23 14:57:40

ஈராக் தலத்திருச்சபை வருங்காலம் குறித்த நம்பிக்கையுடன் செயல்படுவதாக கூறுகிறார் பேராயர்.


மார்ச் 23. தேர்தலுக்குப் பின்னான இக்காலத்தில் ஈராக் மக்கள் வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதாக மகிழ்ச்சியை வெளியிட்டார் அந்நாட்டு கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ.

மக்கள் வன்முறைகளால் பெருமளவில் சோர்வடைந்துள்ளதால் நல்லதொரு வருங்காலம் குறித்த நம்பிக்கை தெரிகிறது என்றார் பேராயர்.

அரசியல் கட்சிகள் தேர்தலையும் பிரச்சாரத்தையும் நாகரிகமான நன்முறையில் நடத்திச்சென்றது நம்பிக்கையின் முதல் படி என்றார் அவர்.

2005ம் ஆண்டின் தேர்தல் குறித்தும் எடுத்துரைத்த பேராயர் சாக்கோ, அது ஒரு பிரிவினை வாத தேர்தலாக இருந்தது என்றார்.

ஈராக்கின் வடபகுதியான மோசூலில் தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரக் காலங்களில் 30 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டு 3500க்கும் மேற்பட்டோர் ஏனைய கிராமங்களுக்கு வெளியேறிச் சென்றாலும், அவ்வாறு சென்ற மக்கள் தற்போது தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதாகவும் கூறினார் கிர்குக் பேராயர்.








All the contents on this site are copyrighted ©.