2010-03-22 12:51:16

மார்ச் 22 தவக்கால சிந்தனை


RealAudioMP3 உரோமையின் அடர்ந்த மக்கட்கூட்டம் நிறைந்த பாந்தயான் சின்னத்திற்கு முன்பாக நான் கண்ட ஒரு காட்சி. என்னை அதிகம் பாதித்த காட்சியும்கூட. பாந்தயான் உல்லாசப் பயணம் மேற்கொள்பவர்கள் உரோமையில் பார்த்து அதிசயிக்கும் உரோமைச் சின்னங்களில் ஒன்று. ஒரு இரம்யமான மாலைப் பொழுதில் ஒரு தாய் தனது எட்டு வயது மகனுக்கு அந்தப் பழம் பெரும் கோயில் சின்னத்தை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்குச் சற்று நேரம் கழித்துத்தான் புரிந்தது அந்தச் சிறுவனுக்குப் பார்வை தெரியாது என்பது. பார்வையிழந்த தனது மகனும் தான் பார்ப்பதைப் போலவே இவ்வுலகைப் பார்க்க, புரிந்து கொள்ள ஆசைப்பட்ட அந்தத் தாய் என் கண்களுக்கு இயேசுவாகவேத் தெரிந்தார்.

“உலகின் ஒளி நானே. என்னைப் பின்செல்பவர் இருளில் நடக்கமாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்கிறார் இயேசு. ஒளியின் மக்களாக விளங்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் எவ்வளவிற்கு இந்த ஒளியை நமது வாழ்வில் வாழ்ந்து காட்டுகிறோம்?

ஒளியின் மக்களாக விளங்கும் நம்மைப் பார்த்து பிற மறைச் சகோதரர்கள், இவர்கள் வித்தியாசமானவர்கள் எனச் சொல்லுுஅளவிற்கு நமது வாழ்வுமுறை முன்னுதாரணமாக அமைந்துள்ளதா?

கிறிஸ்துவை ஒளியாக ஏற்று வாழ முயற்சிக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் எவ்வளவிற்கு நமது சொல்லால், செயலால் கிறிஸ்துவைப் பிறருக்குப் பறைசாற்றுகிறோம்?

எனவே நாம் பெற்ற இயேசு என்னும் இன்பம்

வருக இவ்வையகம் முழுவதும்

என வாழ, வாழவைக்க முதலடி எடுத்து வைப்போம்.(எழுதி வழங்கியவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச)










All the contents on this site are copyrighted ©.