2010-03-22 15:31:06

இந்தோனேசியாவில் தேசிய அளவிலான பொது மதச் சட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தலத் திருச்சபை.


மார்ச் 22. இந்தோனேசியாவில் மதவிவகாரங்களில் மாகாண அரசுகள் முரண்பாட்டுச் சட்டங்களை இயற்றுவதைத் தடை செய்யும் நோக்கில் மத்திய அரசே மதவிவகாரம் தொடர்புடைய அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்திருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது தலத்திருச்சபை.

ஒவ்வொருவரின் மதவழிபாட்டு உரிமைகளையும் பாதுகாத்து உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாய் இருக்கும் நிலையில் இந்தோனேசிய மாகாண அரசுகள் மத சகிப்பற்ற தன்மைகளை ஊக்குவிக்கும் பாகுபாட்டுச் சட்டங்களை இயற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றனர் ஆயர்கள்.

இப்பிரச்ச்னைக் குறித்து விவாதிக்க ஆயர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய இஸ்லாமிய அதிகாரி முகமத் மஹ்ஃபுத், இந்தோனேசியாவின் Nanggroe Aceh Daussalam மாகாண அவையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஷாரியா சட்டம், மக்களைப் பிரிப்பதற்கே உதவியுள்ளது என்றார்.

எல்லா மதங்களும் அமைதியில் ஒன்றிணைந்து வாழ்வதற்கே எச்சட்டமும் உதவ வேண்டுமேயொழிய அவர்களைப் பிரிப்பதற்கல்ல என்றார் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் Adnan Buyung Nasution.

இந்தோனேசியாவில் ஏறத்தாழ 200 மதங்கள் உள்ள நிலையில் புத்தம், கத்தோலிக்கம், கன்ஃபூசியன், இந்து, இஸ்லாம் ம்ற்றும் புரட்டஸ்டான்ட் மதங்களையே அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.