2010-03-22 15:29:47

AIDS குறித்த ஐ.நா. மற்றும் மதத் தலைவர்களின் கூட்டம்.


மார்ச் 22. HIV நோய்க்கிருமிகளின் பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் பதில் நடவடிக்கைகள் எடுக்க மதத் தலைவர்களுக்கும் ஐ.நா. அதிகாரிகளுக்கும் வழிகாட்டும் இரண்டு நாள் கூட்டம் நெதர்லாந்தில் இடம்பெற்று வருகின்றது.

பாஹாய், புத்தம், கிறிஸ்தவம், இந்து, யூதம், இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களையும் ஐ.நா. வையும் சேர்ந்த 40 தலைவர்கள் பங்கு பெறும் இக்கூட்டம், HIV மற்றும் AIDS நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதையும், புறந்தள்ளி வைக்கப்படுவதையும் குறித்தப் பிரச்னைகளில் எவ்விதம் செயல்படுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

நோய் குறித்தப் பிரச்னைகளில் மக்களுக்கு உதவும் விதத்தில் மதத் தலைவர்கள் எங்ஙனம் செயலாற்ற முடியும் என்பது குறித்தவைகளில் மதத்தலைவர்களின் முக்கியப் பங்கையும் வலியுறுத்துகிறது நெதர்லாந்தில் இடம்பெறும் இக்கூட்டம்.








All the contents on this site are copyrighted ©.