2010-03-20 15:18:41

போர் உட்பட பலவகையான வன்முறைகளால் இறப்பவர்களைவிட சுத்தமற்ற தண்ணீர் தொடர்புடைய நோய்களால் அதிகம்பேர் இறக்கின்றனர் - பான் கி மூன்


மார்ச்20,2010 உலகில் போர் உட்பட பலவகையான வன்முறைகளால் இறப்பவர்களைவிட சுத்தமற்ற தண்ணீர் தொடர்புடைய நோய்களால் அதிகம்பேர் இறக்கின்றனர் என்று பான் கி மூன் எச்சரித்துள்ளார்.

மார்ச் 22ம் தேதி “உலக தண்ணீர் தினம்” கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட மூன், சுத்தமான நீர் அரிதாகி வருகின்றது, அதிலும் குறிப்பாக வெப்பநிலை மாற்றத்தினால் இந்நிலை மோசமாகி வருகின்றதென குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் நீர்வளங்கள் ஆபத்தை எதிர்நோக்கி வருவதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதைத் தனது செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார் மூன்.

“நலமான உலகுக்கு சுத்தத் தண்ணீர்” என்ற தலைப்பில் இவ்வாண்டு இவ்வுலக தினம் கடைபிடிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.