2010-03-19 10:16:27

மார்ச், 20. தவக்காலச் சிந்தனை.


எழுதி வழங்குபவர் இயேசு சபை அருட்தந்தை பவுல் ராஜ்.

RealAudioMP3 இந்தியாவைப் பொறுத்தவரை மதங்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளை நாம் காலம் காலமாகக் கண்டு வந்தாலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகளை கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் கண்டோம்.

குஜராத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்,

கர்னாடகத்தில் கிறிஸ்தவ ஆலயம் தொடங்கி மக்கள் வரை தாக்கப்பட்ட கொடூரங்கள்,

கிறிஸ்தவ ஆதிவாசிகளுக்கு எதிரான திட்டமிட்ட அடக்குமுறைகள்,

கிறிஸ்தவ தலித் மக்களுக்கு எதிரான சமூக, சாதீய, அரசியல் வன்முறைகள்

என பல முகங்களில் வன்முறைகள் கிறிஸ்தவர்களைச் சூழ்ந்துள்ளது.

உலகத்தைப் பொறுத்தவரை நைஜீரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா என பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் மதத்தின் பெயரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஏன் இத்தகைய தாக்குதல்கள்? இந்த வன்முறைகளுக்கான காரணங்கள் என்ன?

ஆதித்திருச்சபை தொடங்கி இன்று வரை எப்பொழுதெல்லாம் திருச்சபை உண்மைக்குச் சான்று பகர்கிறதோ அப்பொழுதெல்லாம் தாக்குதலையும், வன்முறைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. பாகாலுக்கு வழிபாடு நடத்தும் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக எரேமியா பேசியதால் அவர் துன்பத்திற்கு உள்ளாகிறார். தங்கள் சுயநலத்திற்காக மக்களை மதத்தின் பெயரால் துன்புறுத்திய பரிசேயர்களை, சதுசேயர்களை, மறைநூல் வல்லுநர்களை இயேசு கண்டித்துப் பேசியதால் அவரைத் தொலைக்கத் திட்டமிடுகிறது இந்தக் கொலைகாரக் கூட்டம். எனவே இயேசுவைப் போல் நாமும் இன்றைய உலகில் உண்மைக்கு, நீதிக்கு சான்று பகரரும்போது துன்பங்களைச் சந்தித்து தான் ஆகவேண்டும்.

புனித வெள்ளி இல்லையேல் உயிர்ப்பு ஞாயிறும் இல்லை. மறக்க வேண்டாம்.








All the contents on this site are copyrighted ©.