2010-03-19 15:59:43

தமிழகத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு : இயக்குனர் சம்பு


மார்ச்19,2010 ''தமிழகத்தில் ஒரு இலட்சத்து எண்பத்திநான்காயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி., பாதிப்பு இருக்கிறது,'' என, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்க திட்ட இயக்குனர் சம்பு கலோலிகர் தெரிவித்தார்.

2007ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ''தமிழகத்தில் 1.84 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர் என்றும், 2009ம் ஆண்டு அக்டோபர் இறுதி வரை 40 ஆயிரம் எச்.ஐ.வி நோயாளிகள், கூட்டு மருந்து சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் கலோலிகர் கூறினார்.

எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏ.ஆர்.டி., மையங்கள் மூலம் இலவச கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில், 37 மையங்கள் செயல்படுகின்றன.. இதுதவிர 46 கூடுதல் மையங்கள் தாலுகா அளவில் செயல்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

எச்.ஐ.வி., பரவாமல் தடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. பெண்கள் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி., பரவும் விகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. தற்போது 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்நோயாளிகளுக்கு சட்ட உதவிகள் வழங்க, 16 அரசு மருத்துவமனைகளில் சட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன என்றும் சம்பு கலோலிகர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.