2010-03-19 15:58:49

இலங்கையில் அமைதியைக் கட்டி எழுப்புவதில் தங்களுக்கு இருக்கும் பெரும் பங்கை யாழ்ப்பாணப் பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்


மார்ச்19,2010 இலங்கையில் அமைதியான சமூகத்தைக் கட்டி எழுப்புவதில் தங்களுக்கு இருக்கும் பெரும் பங்கை வலியுறுத்தி வருகின்றனர் யாழ்ப்பாணப் பெண்கள்.

தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள் என்ற வகையில் சமுதாயத்தில் தங்களின் பொறுப்பு என்ன என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் அண்மையில் ஊர்வலம் மேற்கொண்டனர்.

மார்ச் 8ம் தேதி நூறாவது சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டிருந்தாலும், அத்தினத்தை முன்னிட்டு இவ்வாரத்தில் ஊர்வலம் மேற்கொண்ட சுமார் 250 இந்து மற்றும் கத்தோலிக்கப் பெண்கள், அரசியலில் பெண்களின் பங்கையும் வலியுறுத்தினர்.

இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கு அதிகமாகவும் வாக்காளர்களில் 56 விழுக்காடகவும் இருக்கும் பெண்களன் பங்கு அரசியலில் 5 விழுக்காடே எனவும் அவர்கள் கூறினர்.

கடந்த மே மாதம் முடிவடைந்த இலங்கையின் 26 வருட உள்நாட்டுச் சண்டையில் பெருமளவாக உயிரிழந்தது ஆண்களேயானாலும், குடும்ப உறுப்பினர்களின் இழப்பால் தற்சமயம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் 1980களில் 15 இலட்சமாக இருந்த தமிழர் தொகை, போரினால் தற்சமயம் பாதியாக இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது







All the contents on this site are copyrighted ©.