2010-03-19 15:55:40

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வயதான துறவிகளைப் பராமரிப்பதற்குத் தேசிய நிறுவனம் உதவி


மார்ச்19,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டில் துறவற சபைகள், தங்களின் வயதான மற்றும் நோயாளித் துறவிகளைப் பராமரிப்பதற்கு உதவுவதற்கென அந்நாட்டுத் தேசிய நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 17 மாநிலங்களில் 44 துறவற சபைகளுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் டாலரை இவ்வாண்டில் வழங்வுள்ளது SOAR என்ற தேசிய நிறுவனம்.

இந்த உதவி நிதியானது, கட்டிடங்களைப் பழுது பார்க்கவும் முதியவர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கவும் பயன்படுத்தப்படும் என்று SOAR கூறியது.








All the contents on this site are copyrighted ©.